தென்கொரியாவில் வீடொன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்வன!
தென்கொரியாவில் 20 வயது இளைஞன் ஒருவர் தான் குடியிருந்த வீட்டில் நூற்றுக்கும் அதிகமான ஊர்வன விலங்குகளை கைவிட்டுச் சென்றார்.
அதில் பல விலங்குகள் கவனிப்பு இல்லாததால் இறந்தன. இந்நிலையில் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இளைஞன் மீது விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இச்சம்பவம் போக்டா டாங் பகுதியில் நடந்தது
கடந்த மாதம் 11ஆம் திகதி வீட்டின் உரிமையாளர், நபரை தொடர்புகொள்ள முயற்சி செய்தார். பல மாதங்களாக நபரிடம் இருந்து தகவல் வராததால் வீட்டு உரிமையாளருடன் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது வீட்டில் இறந்த நிலையில் 80 பல்லி வகைகளும் 15 பாம்புகளும் இருந்ததை அவர்கள் கண்டனர்.அதன் பின்னர் அதிகாரிகள் வீட்டை சோதனை செய்தனர். அதில் உயிருடன் 152 பல்லி வகைகளும் 4 பாம்புகளும் இருந்தன.
விலங்குகள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கைவிடப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.