தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாகவும் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்களும் மாநிலத்தில் வேறு இடங்களில் வசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)