மொசாம்பிக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்து – 90க்கும் மேற்பட்டோர் பலி
மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது, கப்பலில் சுமார் 130 பேர் இருந்ததாகவும், இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகள் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலின் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் கப்பல் இருந்தமையே இந்த விபத்தை ஏற்படுத்தியதாக மொசாம்பிக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கப்பல் நம்புலா கடற்கரையிலிருந்து லுங்காவிலிருந்து மொசாம்பிக் நோக்கி பயணித்ததாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் பயணித்தவர்கள் காலரா நோய் பரவியதால் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.





