இலங்கை

சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹ, களுத்துறை,  இரத்தினபுரி,  கேகாலை,  குருநாகல்,  புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்