மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70இற்கும் மேற்பட்டோர் பலி!
மாலியில் கடந்த வார இறுதியில் கட்டுப்பாடற்ற தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே, தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் விவரங்களை உறுதிசெய்து, இது ஒரு விபத்து என்று கூறினார்.
குறித்த சுரங்கத்தில் 100 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவின் 3-வது தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய சுரங்க விபத்துகள் இடம்பெறுவது சகஜமாகும்.
(Visited 3 times, 1 visits today)