செய்தி

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களித்த 62 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆரம்ப வாக்களிப்பில், 62 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாய் இருப்பதாக ஆகக் கடைசிக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் எந்தப் பக்கமும் சாயக்கூடிய ஏழு மாநிலங்களிலும்கூட யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாதநிலை.

Georgia மாநிலத்தில் மூன்றரை மில்லியன் மக்கள் ஆரம்ப வாக்களிப்பில் பங்கேற்றதாக அதிகாரிகள் கூறினர். பதிவு செய்த வாக்காளர்களில் 45 விழுக்காட்டினர் வாக்களித்துவிட்டனர். அது முன்பு எப்போதும் இல்லாத அளவாகும்.

அதிக அளவில் மக்கள் வாக்களித்தால் அது தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று இரண்டு வேட்பாளர்களுமே நம்புகின்றனர். அமெரிக்காவில் தேர்தல் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!