பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதிகள் ஆபத்தான பயணம்

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்ததாக பிரெஞ்சு கடற்படையினர் அறிவித்திருந்தனர்.
அன்றைய நாளில் மொத்தமாக 647 பேர் படகுகளில் ஆங்கிலக்கால்வாயை கடந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 28,204 அகதிகள் இதுபோல் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது சென்ற 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சதவீதம் அதிகமாகும்.
அதேவேளை, வியாழக்கிழமை பதிவான குழந்தையின் மரணம், இவ்வருடத்தில் இதுவருடத்தில் பதிவான 45 ஆவது மரணமாகும்.
(Visited 10 times, 1 visits today)