செய்தி

சுவிஸில் கபாப் சாப்பிட்டவர்கள் 60க்கும் அதிகமானோருக்கு நேர்ந்த கதி – ஆய்வில் வெளியான தகவல்

சுவிஸில் கடந்த வாரம் உணவகம் ஒன்றில் கபாப் சாப்பிட்டவர்கள் சுகவீனம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கபாப் சாப்பிட்ட 62இற்கும் அதிகமானோர் இரைப்பை நோய்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையை பெற்றனர்.

அவர்களிடமும், உணவகத்திலும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளை அடுத்து, நோராவைரஸ் கிருமித் தொற்றே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தினால் தயாரிக்கப்பட்ட cocktail sauce இல் நோரா வைரஸ் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலர் நோயுற்றதை அடுத்து சுகாதார அதிகாரிகளால் குறித்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த உணவகம் இன்னமும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

உரிய தொற்று நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!