இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
வடக்கு இஸ்ரேலின் பின்யாமினா பகுதியை குறிவைத்து ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் ஐந்து பிராந்திய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகரிக்கள் தெரிவித்தனர்.
டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் (IDF) கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்பொல்லா பொறுப்பேற்றுள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறைந்தது 67 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் அருகிலுள்ள ஹடேராவில் உள்ள ஹில்லெல் யாஃபே மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.மற்றவர்கள் டெல் ஹாஷோமர், ஹைஃபா, அஃபுலா மற்றும் நெதன்யாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.