இலங்கை

இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்!

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (25.07) நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,049 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 52 டெங்கு அபாயப் பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அது படிப்படியாகக் குறைந்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் 9,916 டெங்கு வழக்குகளும், ஜூலை மாதத்தில் 5,729 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 11,929 பேர் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேல் மாகாணத்தில் 27,315 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தில் 11,833 பேர் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 3,553 பேர் எனவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 3,841 நோயாளர்களும், புத்தளம் மாவட்டத்தில் 2,869 நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2,226 நோயாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 2,210 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்