ஈரானில் நாடு தழுவிய போராட்டங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் மரணம்
நாடு தழுவிய போராட்டங்கள் மீதான ஈரானின்(Iran) மோசமான அடக்குமுறையில் குறைந்தது 5,002 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் மிகவும் விரிவான இணைய முடக்கம் இரண்டு வார காலத்தை தாண்டியதால் இன்னும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், 4,716 ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய 203 பேர், போராட்டங்களில் பங்கேற்காத 43 குழந்தைகள் மற்றும் 40 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது
மேலும், அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விரிவான கைது நடவடிக்கையில் 26,800 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.




