மேற்கு ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் மரணம்

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒரு லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை மற்றும் மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
ஹெராத் மாகாண காவல்துறையினர் பேருந்தின் “அதிக வேகம் மற்றும் அலட்சியம்” காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
ஈரானில் இருந்து சமீபத்தில் தலைநகர் காபூலுக்குச் சென்ற ஆப்கானியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இவவறு விபத்துக்குள்ளானதாக மாகாண அதிகாரி முகமது யூசுப் சயீதி தெரிவித்துள்ளார்.
வந்தவர்கள் சமீபத்திய மாதங்களில் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஆப்கானியர்களின் குழு ஆகும்.
இறந்தவர்களில் பெரும்பாலோர் பேருந்தில் இருந்தவர்கள், லாரியில் பயணித்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.