இலங்கையில் 40,000 ற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைமுழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளது.
பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
இது பாரிய பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
(Visited 28 times, 1 visits today)





