ஐரோப்பா

ஒலிம்பிக்கில் 40க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு

2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்களில் 40க்கு மேற்பட்டவர்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இச்சம்பவங்கள் புதிய உலகளாவிய கொவிட்-19 கிருமித்தொற்று உயர்வை எடுத்துக்காட்டுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 6ஆம் திகதி தெரிவித்தது.

கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னால் உள்ள கிருமி இன்னும் பரவி வருவதாகவும் நாடுகள் இத்தொற்றுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் புகழ்பெற்ற பல போட்டியாளர்களுக்கும் கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது.

பிரிட்டனின் நீச்சல் வீரர் ஆடம் பீட்டி, ஆண்களுக்கான 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு நாளுக்குப் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று அவரது குழு தெரிவித்தது.பதக்கம் வெல்லக்கூடியவர் என்று கருதப்பட்ட ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டர், உடல் நலக்குறைவால், பெண்களுக்கான 1500 மீட்டர் எதேச்சை பாணி போட்டியிலிருந்து விலகினார்.

84 நாடுகளின் தரவுகளின்படி, கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கிருமி – சார்ஸ்-கோவி-2-க்கான சோதனைகளின் தொற்று விகிதம் பல வாரங்களாக உயர்ந்துகொண்டு வருவதைக் காட்டுகிறது என்று உலக சுகதார நிறுவனத்தின் தொற்றுநோய், தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

மேலும், சம்பவ எண்ணிக்கையில் எண்களில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்கூட்டிய குறிப்பைக் கொடுக்கும் கழிவு நீர் கண்காணிப்பு, சார்ஸ்-கோவி-2யின் புழக்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதை விட இரண்டு முதல் 20 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது.

“இது குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில், கிருமி தொடர்ந்து உருமாற்றம் பெறுகிறது. இது நம் அனைவரையும் மிகவும் கடுமையான கிருமியின் தாக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. இது நமது கண்டறிதல் மற்றும்/அல்லது தடுப்பூசி உட்பட எங்கள் மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கக்கூடியது,” என்று மேலும் தெரிவித்தார் டாக்டர் மரியா.

“அண்மைய மாதங்களில் எந்த பருவகாலத்தில் இருந்தாலும் பல நாடுகளில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுகளின் 40க்கு மேற்பட்ட போட்டியாளர்களிடம் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது,” என்று டாக்டர் மரியா விவரித்தார்.

போட்டியாளர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கவில்லை. நான் முன்பே கூறியதுபோல, மற்ற நாடுகளில் இத்தொற்று அதிவேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது,” என்றும் அவர் விளக்கினார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்