தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு
2025ம் ஆண்டின் இறுதியில் உலகளவில் தங்கள் பணிக்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 330 என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300த் தண்டியுள்ளதாக குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி நிலவரப்படி சீனா(China) 50 கைதிகளை சிறையில் அடைத்துள்ளது, அதைத் தொடர்ந்து மியான்மர்(Myanmar) 30 கைதிகளையும், இஸ்ரேல்(Israel) 29 பாலஸ்தீன(Palestine) பத்திரிகையாளர்களையும் தடுத்து வைத்துள்ளதாக பத்திரிகை சுதந்திர கண்காணிப்பு அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த இடத்தில் ரஷ்யா(Russia) 27 கைதிகளைக் கொண்டுள்ளது, அவர்களில் ஐந்து பேர் உக்ரேனியர்கள்(Ukrainians). அதனை தொடர்ந்து 25 கைதிகளுடன் பெலாரஸ்(Belarus) மற்றும் 24 கைதிகளுடன் அஜர்பைஜான்(Azerbaijan) உள்ளது.
2024ம் ஆண்டின் இறுதியில் தங்கள் பணிக்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 384 ஆகும்.
“இந்த சாதனை படைக்கும் எண்ணிக்கை வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தையும் உலகளவில் அதிகரித்து வரும் ஆயுத மோதல்களின் எண்ணிக்கையையும் பிரதிபலிக்கிறது” என்று பத்திரிகை சுதந்திர கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் எந்த குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்று நியூயார்க்கை(New York) தளமாகக் கொண்ட NGO தெரிவித்துள்ளது.




