தாய்லாந்து விமான நிலையத்தில் உயிருடன் சிக்கிய 30 க்கும் அதிகமான விலங்குகள்
தாய்லாந்திலிருந்து தைவானுக்கு 30க்கும் அதிகமான விலங்குகள் உயிருடன் கடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமான நிலைய ஊழியர் ஒருவர் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2 நீர்நாய்க் குட்டிகள், 28 ஆமைக் குஞ்சுகள், ஒருவகை அணில், ஆகிய விலங்குகள் தைப்பே விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் சில விமானத்தின் சரக்குப் பகுதியிலிருந்து தப்பியபோது விலங்குகள் கடத்தப்பட்டது புலப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
மனிதத் தவற்றால் விலங்குகள் கடத்தப்பட்டது கண்டறியப்படவில்லை எனத் தாய்லந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் குறிப்பிட்டது.
விலங்குகளைக் கடத்தியது இரு வெளிநாட்டவர்கள். அவர்களின் பெட்டிகள் சந்தேகத்தை எழுப்பியதாகவும் விமான நிலைய ஊழியர் பெட்டிகளைச் சோதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஊழியர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விலங்குகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரைத் தைவானிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.