ரோமில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
இத்தாலி தலைநகர் ரோமில் பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதிக்கு போலீசார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். ஏரிவாயு கசிவை நிறுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, திடீரென பெட்ரோல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார், தீயணைப்புப்படையினர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





