இலங்கை இராணுவத்தில் இருந்து வௌியேற்றப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள்!

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்தது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மற்றும் அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு வராத இராணுவ உறுப்பினர்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவத்தினரை சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 26 times, 1 visits today)