இலங்கை

அஸ்வெசும உதவி திட்டம் குறித்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அஸ்வெசும’ நலன்புரி திட்டம் குறித்து  இதுவரை 188, 794 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 3304 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வார நாட்களில் பொதுமக்களும் 1924 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி  தங்களது கருத்துக்களை கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘அஸ்வெசுமா’ சமூக நலத் திட்டத்தின் இறுதிப் பயனாளிகள் பட்டியல்  மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்க முகவர்கள் ஊடாக குறித்த பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!