அமெரிக்காவில் 10,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்காவில் அரச நிறுவனங்களில் கடமையாற்றி 10,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எலான் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பணிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 1 visits today)