இலங்கை:10 இலட்சத்துக்கும் மேல் திரண்ட மக்கள்! அநுராதபுரத்தில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொசன் போயா வாரமானது இன்று செவ்வாய்க்கிழமை முதல் (18) எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அநுராதபுரத்தில் பௌத்த மத அனுஷ்டானங்களுடன் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, பொசன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 4,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)