இஸ்ரேல் தாக்குதலில் 08 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (29.10) வரை 8,005 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களில் 3,342 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இது தொடர்பான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 10 times, 1 visits today)