இலங்கை செய்தி

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை வீரர்கள்

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றிய சுமார் 70 இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணி என அழைக்கப்படும் உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் சேர விண்ணப்பித்துள்ளதாக உக்ரேனை தளமாகக் கொண்ட முன்னாள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த குழு உக்ரைனுக்கு செல்லும் பாதையில் இருப்பதாகவும் அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான பாதுகாப்பு முன் வரிசைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஒரு மில்லியன் ரூபா தொடக்கம் 12 மில்லியன் ரூபா வரை மாதாந்த சம்பளத்திற்கு உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

தற்போது, உக்ரேனிய வெளிநாட்டு படையணியில் 20க்கும் மேற்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினர் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை