இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவை தாக்கும் அசுரப்புயல் : சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பிரித்தானியாவை தாக்கும் மோசமான புயல்கள் குறித்து முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வாரத்தில் வெப்பமான வானிலை முடிவுக்கு வரும் எனவும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் MET OFFICE  அறிவித்துள்ளது.

அத்துடன் மோசமான வானிலை புயலாக மாறும் எனவும் இவை பல இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், தெற்கு மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு சனிக்கிழமை இரண்டு மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை முன்னறிவிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கையால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நியூகேஸில், கிளாஸ்கோ, எடின்பர்க் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகியவை அடங்கும். வானிலை அலுவலக எச்சரிக்கை சனிக்கிழமை மாலை 6 மணி வரை அமலில் உள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!