ரஷ்யாவில் 17 கிலோகிராம் எடை கொண்ட பூனை – எழுந்து நடக்க முடியாத பரிதாப நிலை

ரஷ்யாவில் 17 கிலோகிராம் எடை கொண்ட பூனை ஒன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய மருத்துவமனையின் அடித்தளத்தில் இந்த பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் Kroshik என தெரியவந்துள்ளது.
கிரோஷிக் தற்போது Matroskin இருப்பிடத்தில் உள்ளது. அதன் எடையின் காரணத்தால் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.
தற்போது அதன் எடையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கிரோஷிக்கின் முன்னைய உரிமையாளர்கள் அதனை மருத்துவமனையின் அடித்தளத்தில் விட்டுச்சென்றதாக நம்பப்படுகிறது.
சூப், மதுபானம், இறைச்சி போன்றவற்றை உண்டதால் அதன் எடை அதிகரித்திருந்ததாகக் கூறப்பட்டது.
(Visited 21 times, 1 visits today)