இந்திய விமான நிலையத்தில் பயணிகள் பையில் சிக்கிய குரங்குகள்
இந்திய விமான நிலையம் ஒன்றில் பயணியின் பையில் அரிய வகைக் குரங்குகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்தப் பயணி மும்பை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக இந்தியா சென்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது பயணப் பையிலிருந்து குரங்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது இரண்டு குரங்குகளில் ஒன்று உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
விலங்குகளை நாட்டுக்கு நாடு கடத்தும் கும்பல் ஒன்றினால் குரங்குகள் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேக நபரான பயணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்தக் கடத்தல் கும்பலின் வலைப்பின்னல் தொடர்பில் இந்தியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)





