பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கம்

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் தலைமை பந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ரிஸ்வான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகிய பின்னர், கடந்த ஆண்டு ஒக்டோபரில் ரிஸ்வான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் அடுத்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷாஹீன் ஷா அப்ரிடி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.