கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொயின் அலி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை பிரதி நிதித்துவப்படுத்தி இருந்த மொயின் அலி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி டி20 பிளாஸ்ட் தொடருக்குப் பின்னர் அவர் இவ்வாறு ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அவர் 2025 ஆம் ஆண்டுக்கான The Hundred தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக மொயின் அலி கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)