இந்தியா செய்தி

மோடியின் வேஷம் தமிழ்நாட்டில் எடுபடாது – செல்வபெருந்தகை

கூட்டணி தொடர்பாக அதிமுக வுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் திமுக வுடன் முரண்பாடு இல்லை, நாங்கள் கேட்கும் தொகுதி திமுக கொடுப்பார்கள் என்றும் மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மதுரை, விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அமலாக்கத் துறை, வருமானவரித்துறையை தன் வசம் வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தற்போது வங்கிகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்.

ஒரு மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க 6 மாத காலம் அவகாசம் கேட்கிறது.

பாஜக அரசையும், ஸ்டேட் வங்கியையும் கண்டித்து நாளை மயிலாடுதுறையில் மாலை 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஸ்டேட் வங்கி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜனநாயகத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத ஒரே அரசு பாஜக தான்.

கால்டுவெல் இல்லை என்றால் இங்கே பள்ளிகள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். தமிழ் பேசத் தெரியாத ஒருவர் தமிழ் மொழியை ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்து கொடையாக கொடுத்துச் சென்றார்.

வில்லியம் ஜோசப்பை ஏற்றுக்கொள்ளும் ஆளுநர், பிரதமர் ஏன் கால்டுவெல்லை ஏற்று கொள்ள முடியவில்லை.இரண்டு பேரும் கிறித்தவர்கள், இரண்டு பேரும் இந்திய நாட்டை சேராதவர்கள் .யாரெல்லாம் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்கு புகழ் பாடுகிறார்கள்.

சமஸ்கிருதம் ஆராய்ச்சி மொழியும் இல்லை, ஆதார் மொழியும் இல்லை.தமிழை ஆதரிப்பவர்களை பாஜக அரசு எதிர்க்கிறது.

வாக்கு வங்கிக்காக மோடி வேசம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.மோடியின் வேஷம் ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபடாது.

நாங்கள் கேட்கும் தொகுதி திமுக கொடுப்பார்கள்.திமுக வுடன் முரண்பாடு இல்லை. வெகு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைவர்கள் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று முன்மொழிகிறார்கள்.

கூட்டணி தொடர்பாக ஒரு போதும் அதிமுக -வுடன் நேரடியாக மறைமுகமாகவோ பேச்சுவார்தை நடத்தவில்லை.

மதுரை எய்ம்ஸ் – ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் போல் உள்ளது குஜராத் எய்ம்ஸ் க்கு இந்திய அரசு பணம், மதுரை எய்ம்ஸ் க்கு ஜப்பான் நிதி நிறுவனத்திடம் கடனா?
தமிழ்நாட்டிற்கு ஒரு நீதி, குஜராத்திற்கு ஒரு நீதியா?எத்தனை முறை பூஜை போடுவார்கள்? பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது. தமிழக மக்கள் சரியான பதிலடியை கொடுப்பார்கள்.

2014 தேர்தல் வாக்குறுதியில் 15 லட்சம் கொடுப்பதாக சொன்னார்கள், தற்போது 1 லட்சம் தருகிறோம் என்று சொல்வாரா? அல்லது 2 லட்சம் தருகிறோம் என்று சொல்லுவாரா? என்று தெரியவில்லை.பொய்யும், புரட்டும் பேசும் மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்றார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி