பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மோடி கொடுத்த பரிசு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு, அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில் இந்து கோவிலின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள இடம் இந்து நம்பிக்கையின்படி ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது.
நேற்று நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார்.
இன்று பிரான்ஸ் அதிபர் தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்த பயணத்தின் போது அவர் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடைக்கு சென்று பிரதமர் மோடியுடன் டீ குடித்த புகைப்படங்களையும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)