F-35 போர் விமானத்தில் மாற்றம் – நீண்ட தூரம் பறந்து சென்று தாக்க இஸ்ரேல் போடும் திட்டம்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் ஆபரேஷன் லயன் தாக்குதலில் அதன் F-35 போர் விமானத்தில் இஸ்ரேல் மாற்றம் மேற்கொண்டுள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமெரிக்காவின் உதவியோடு சில கூடுதலான அம்சங்களுடன் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடுவானிலோ தரையிறங்கியோ எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லாதவகையில் F-35 விமானங்களில் கூடுதல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இத்தகைய போர்விமானங்கள் ராடார் கருவிகளில் சிக்காமல் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருப்பதால், அதன் வடிவமைப்பை மாற்றுவது எளிதான காரியம் அல்ல என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக விவரங்களை வெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





