ரஷ்யா சென்ற மோடி – கட்டித்தழுவி வரவேற்ற புட்டின் – இன்று முக்கிய பேச்சுவார்த்தை
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றுள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தம், வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் பேரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை ஈடுபடுத்தும் ரஷ்ய ராணுவத்திடமிருந்து இந்தியர்களை விடுவிக்கவும் மோடி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மொஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர்மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியினர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர்
கிரம்ளின் மாளிகைக்கு சென்ற மோடியை கட்டித்தழுவி வரவேற்ற புட்டின் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் இருவரும் கலந்தாலோசனை நடத்தியபின், மோடிக்கு புதின் இரவு விருந்து அளித்தார்.