இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லும் மோடி!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/Modi-3-1-1-1-jpeg.webp)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமருக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நாளை (13) வாஷிங்டனில் நடைபெற உள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
(Visited 1 times, 1 visits today)