மோடி – புடின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்
உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இளம்வயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது என்று புடினுடனான மோடியின் சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
(Visited 42 times, 1 visits today)





