இந்தியா

திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்திய மோடி!

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

திருவள்ளுவர் நாளை முன்னிட்டே அவர் இவ்வாறு விடியோ வெளியிட்டுள்ளார்.

தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மோடி குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!