இந்தியாவில் வளாகங்களை நிறுவுமாறு ஜெர்மன் பல்கலைக்கழகங்களுக்கு மோடி அழைப்பு
ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை நிறுவ வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
ஜெர்மன் ஜனாதிபதி மெர்ஸுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் காசா நிலைமை உட்பட உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்ற கருத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி அதனை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளதென கூறினார்.
மேலும் இந்தியாவும் ஜெர்மனியும் அசைக்க முடியாத உறுதியுடன் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளன என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.





