மத்திய கிழக்கு

பாலைவனத்தில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம்!

சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்று உள்ளது. அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘மராயா’ என்ற சொல்லுக்கு ‘எதிரொளிப்பு’ எனப் பொருள்.

இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கண்ணாடி கட்டிடம் அமைப்பது சாதாரணமான காரியம் இல்லை. ஏனெனில் கண்ணாடியின் எதிரொளிப்பால் வீட்டின் உள்ளே வெப்பம் அதிகமாகும்.

இதற்கு தீர்வாக புதிய வகையான கண்ணாடி தாமிரத்தினால் செய்யப்பட்டது. கடுமையான வெப்பம் கண்ணாடியில் ஆக்சிஜனேற்றத்தை ஏற்படுத்தும். எனவே மராயா கட்டிடத்தின் கண்ணாடிக்கு சிறப்பு பூச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. இது மணல் புயல்கள், அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாலைவனத்தில் நிகழக்கூடிய பிற வானிலை சவால்களையும் சமாளிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

மராயா கண்ணாடி கட்டிடத்தின் மேற்கூரை பாலைவனத்தின் காட்சிகளை பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. மராயாவில் நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கு சிறப்பு உணவாக வழங்கப்படும் பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழங்களைத் தவறவிடாதீர்கள். மராயாவுக்கு வரும் பார்வையாளர்கள் இளஞ்சிவப்பு சூரிய அஸ்தமன ஒளி முதல் மின்னும் விடியல் வரை அனைத்தையும் பார்த்து ரசிக்கின்றனர். அது நாளின் ஒவ்வொரு மணித்துளிகளையும் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக மாற்றுகிறது. சில பார்வையாளர்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல தயங்குகிறார்கள். எனவே அவர்கள் வெறுமனே மராயாவுடன் புகைப்படங்கள் மட்டும் எடுத்து கொள்கின்றனர்

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.