மிசோரம் நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
மிசோரமின் ஐஸ்வால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பல நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெமல் சூறாவளிக்குப் பிறகு நிலச்சரிவு மற்றும் இடைவிடாத மழையைத் தொடர்ந்து அவர்கள் வெவ்வேறு இடங்களில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் கருதுகின்றனர்.
கல் குவாரி இடிந்து விழுந்த இடத்தில் இருந்து 14 பேர் உட்பட மொத்தம் 25 உடல்கள் மே 28 இரவு வரை மீட்கப்பட்டன.
இன்று மேலும் நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு 29 ஆக உயர்வு.
ஐஸ்வாலின் சேலம் வெங் பகுதியில் மூன்று உடல்களும், பால்காவ்ன் மற்றும் ஐபாவ்க் கிராமங்களில் இரண்டு உடல்களும், லுங்சே மற்றும் கெல்சிஹ் கிராமங்களில் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
பலியான 29 பேரில், 23 பேர் மிசோரம் வாசிகள், ஐந்து பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் அசாமின் சில்சார் நகரைச் சேர்ந்தவர்கள் என அல்வால் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் நான்கு வயது சிறுவனும் ஆறு வயது சிறுமியும் உள்ளடங்குகின்றனர்.