22 பயணிகளுடன் மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர் : தேடுதல் வேட்டை தொடர்கிறது!

கம்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் மூன்று பணியாளர்கள் மற்றும் 22 பயணிகளுடன் இருந்த ரஷ்ய ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முதற்கட்டத் தரவை மேற்கோள்காட்டி Interfax செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Mi-8T ஹெலிகாப்டர் Vachkazhets எரிமலைக்கு அருகே புறப்பட்ட நிலையில், 04:00 GMT நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதனை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 37 times, 1 visits today)