இந்தியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – பல பகுதிகளில் மின்தடை!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டதால் டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன, ஜம்மு உட்பட பல எல்லைப் பகுதிகள் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு எல்லையின் பரந்த பகுதியில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை இந்தியா முறியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியா ஆகிய இடங்களில் குறைந்தது எட்டு பாகிஸ்தான் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன, இந்தியாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு மேற்கு எல்லையில் பல இடங்களில் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு பிராந்தியம் முழுவதும் மின்தடை மற்றும் சைரன்கள் செயல்படுத்தப்பட்டன.
முன்னதாக, பாகிஸ்தான் படைகள் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள 15 நகரங்களில் உள்ள பல இராணுவ இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்க முயற்சித்ததாக இந்திய இராணுவம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.