Miss World grand finale: அனுதிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து
																																		இந்தியாவின் ஹைதராபாத்தில் இன்று (31) நடைபெறும் 72வது மிஸ் வேர்ல்ட் கிராண்ட் ஃபினாலேயில் இலங்கையின் பிரதிநிதி அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க X தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“72வது மிஸ் வேர்ல்ட் ஃபெஸ்டிவல் கிராண்ட் ஃபினாலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஏற்கனவே தனது நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார், சர்வதேச அரங்கில் நமது நாட்டையும் நமது மக்களையும் அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இன்று அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா 2024 முடிசூட்டப்பட்ட குணசேகர, மிஸ் வேர்ல்டில் திறமை, நேருக்கு நேர் மற்றும் மல்டிமீடியா சவால்களில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
72வது மிஸ் வேர்ல்ட் கிராண்ட் ஃபினாலே இன்று இரவு இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

        



                        
                            
