இலங்கையில் நிலநடுக்கம்- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
கண்டி உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று மாலை 5.05 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடியூட்டாக உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், இது சிறிய நிலநடுக்கம் என்பதால், பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.





