“தற்காப்புக்காகவே சுட்டோம்”: வெள்ளை மாளிகை அறிவிப்பால் வலுக்கும் சர்ச்சை
அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் பெடரல் படையினரால் 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாரிய வன்முறை வெடித்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் நிலைநிறுத்தப்பட்டுள்ள பெடரல் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நேற்று இரவு கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
குறித்த பெண் தனது காரால் (car) அதிகாரிகளை மறித்ததால், தற்காப்புக்காகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெடரல் படையினரின் வருகையாலேயே தெருக்கள் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக மினசோட்டா (Minnesota) அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் விளக்கத்தை உள்ளூர் அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், அங்கு பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.





