துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!
துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உரிமங்களை புதுப்பிக்கும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.
உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி, பிப்ரவரி 10, 2026 க்கு முன் அபராதம் செலுத்தி துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
குறித்த காலக்கெடுவிற்குள் உரிமத்தைப் புதுப்பிக்காத எந்தவொரு துப்பாக்கி உரிமையாளருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





