ஐ.சி.சி தலைமை செயல் அதிகாரியுடன் அமைச்சர் ஹரின் சந்திப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை செயல் அதிகாரி Geoff Allardice ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (10) நடைபெற்றது.
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக விளையாட்டு அமைச்சர் தனது X கணக்கின் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை செயல் அதிகாரி Geoff Allardicஐ சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன், மேலும் ஆக்கபூர்வமான விவாதம் மற்றும் SLC க்கு முன்னோக்கி செல்லும் வழி என அமைச்சர் கூறியுள்ளார்.





