தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலு:2வது நாளாகவும் தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான துறையினர் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

மேலும் எ.வ.வேலு – வின் மகனான எ.வ. கம்பன் இல்லத்திலும் இரவு முதல் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது……

தமிழகத்தில் தொடர்ந்து திமுக பிரமுகர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி த்துறையினர் சோதனையிட்டு பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் தற்போது திமுகவின் மிக முக்கிய அமைச்சராக கருதப்படும் பொதுபணிதுறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுவருவது திருவண்ணாமலை மக்கள் மட்டும் அல்லாமல் தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் எ.வ.வேலுக்கு சொந்தமான மற்றும் அவர்களின் நெறுக்கமானவர்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 30 மாதத்தில் எ.வ.வேலு 2 மருத்துவ கல்லூரி திறந்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்