இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான மக்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 450 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே அதிகமானோர் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்கு இலங்கை பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)