இங்கிலாந்தில் ஈ-விசாவை பெறாத மில்லியன் கணக்கான மக்கள்!
இங்கிலாந்தில் சுமார் 1 மில்லியன் மக்கள் இன்னும் eVisa ஐப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
பிரிட்டனில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உள்ள உரிமையை நிரூபிக்கும் குறித்த விசாவாவை பெற்றுக்கொள்வதற்கு டிசம்பர் மாத இறுதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட eVisa திட்டம், குடிமக்கள் அல்லாத அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் உரிமையை நிரூபிக்கும் டிஜிட்டல் அமைப்பாகும்.
அண்மையில் கூடிய பாராளுமன்ற அமர்வில் உள்துறைச் செயலர் யவெட் கூப்பர், சுமார் 4 மில்லியன் மக்கள் உடல் ரீதியான குடியிருப்பு அனுமதி – பயோமெட்ரிக் குடியிருப்பு அனுமதி – மற்றும் eVasas க்கு டிசம்பர் 31 க்குள் மாற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 3.1 மில்லியன் பேர் மட்டுமே குறித்த விசாவை பெற்றுள்ளனர். இருப்பினும் வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவடைவதற்கு இன்றும் ஒருவாரமே உள்ள நிலையில் ஒரு மில்லியன் மக்கள் இதனை பெறவில்லை எனக் கூறப்படுகிறது.