செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பல லட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயம் – ட்ரம்பால் நேர்ந்த விபரீதம்

கனடாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்தால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரியை விதித்தால் மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு கனடா மீது வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டால் அது பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வரி விதிப்பானது மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் எனவும் இதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!