இஸ்ரேலில் அரசிற்கு எதிராக லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம்
சாகாவில் நடைபெற்று வரும் போரில், எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான முழு எல்லைப் பகுதியையும் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில்,ஹமாஸ் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிணைக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்க இஸ்ரேல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை(ஜூன்1) இரவு டெல் அவிவ் நகரின வீதிகளில் திரண்டு போரட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவிநீக்கம் செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பின் இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது.
அதுபோல ஜெருசலேமில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த முற்றுகை போராட்டத்தின் போது காஸவிடம் தொடர்ந்து நீடித்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஹோ பைடனுக்கு நன்றி தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.